பிரதமர் மோடியின் ட்விட்டர் ஹேக்செய்யபட்டு பிட்காயின் குறித்து ட்விட்..!
பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மர்மநபர்கள் சிலரால் இன்று அதிகாலை திடீரென சிறிதுநேரம் ஹேக் செய்யப்பட்டது. பிட்காயினை இந்தியா அங்கீகரித்துவிட்டதாக பதிவிடப்பட்டிருந்து பின்னர் அது நீக்கப்பட்டது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளனர். இன்று அதிகாலை 2.11 மணிக்கு மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை சிலர் ஹேக் செய்து ட்விட் செய்துள்ளனர்.
அந்த ட்வீட்டில், ‘பிட்காயினுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது. அரசு அதிகாரப்பூர்வமாக 500 BTC ஐ வாங்கி நாட்டின் அனைத்து மக்களுக்கும் விநியோகித்து வருகிறது. என்று பதிவிட்டு லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.இதனால் பலர் குழப்பம் அடைந்தனர்.
அதன் பின் பிரதமரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்று தெரிந்து , அதைத்தொடர்ந்து, ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கை உடனடியாக சரி செய்து பாதுகாக்க ட்விட்டர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து இரண்டு நிமிடங்களில் அந்த ட்வீட் நீக்கப்பட்டது.
அடுத்த சிறிது நேரத்தில் மோடியின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமரின் அலுவலக அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில்,
பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. ட்விட்டர் நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக கணக்கு மீட்கப்பட்டது. ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் பதிவிட்ட பதிவுகளை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
Tags: இந்திய செய்திகள்