Breaking News

மொபைல் மூலம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இனைப்பது எப்படி!!! முழு விவரம்......

அட்மின் மீடியா
0

 வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? எளிய வழிமுறை


தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது 

அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறையும் இதில் அடங்கும். இதன் மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒரே நபர் வெவ்வேறு தொகுதிகளில் வாக்களராக பதிவு செய்திருப்பதை தடுக்க இந்த நடைமுறை உதவும் என சொல்லப்பட்டுள்ளது. எனவே ஈசியாக ஆன்லைனிலேயே ஆதார் கார்டு - வாக்காளர் அட்டையை இணைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

முதலில் www.nvsp.in என்ற இணையதள முகவரிக்கு செல்லவும். அதில் லாகின் என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்

பின் அவற்றில் தாங்கள் ஏற்கெனவே User ID கிரியேட் செய்து வைத்திருந்தால் அதில் User ID மற்றும் password கொடுத்து login செய்து கொள்ளுங்கள். 

இல்லை என்றால் அங்கு Don’t have account, Register as a new user என்பதை கிளிக் செய்து.உங்களுக்கான Account-ஐ கிரியேட் செய்ய வேண்டும்.

Don’t have account, Register as a new user என்பதை கிளிக் செய்தவுடன் ஒரு PAGE ஓபன் ஆகும் அதில் உங்களுடைய தொலைபேசி எண்ணை பதிவு செய்து அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள captcha code-ஐ டைப் செய்து Send OTP என்பதை கிளிக் செய்யவும்

அடுத்து உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP எண் அனுப்பப்படும். அதனை ENTER OTP என்ற இடத்தில் டைப் செய்து Verify என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது தங்களுடைய மொபையில் நம்பர் Verify-ஐ ஆகிவிடும்.அதன் பிறகு I don’t have EPIC number என்பதை கிளிக் செய்து, தங்களுடைய first name, lest name, password, confirm password ஆகியவற்றை டைப் செய்து Register என்பதை கிளிக் செய்யுங்கள்.இப்பொழுது தங்களுடைய Account Register ஆகிவிடும். அதன் பிறகு user id & password-ஐ கொடுத்து லாகின் செய்து கொள்ளவும்

அடுத்து உங்கள் வரும் பக்கத்தில் உங்கள் விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ‘Feed Aadhaar No’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து ஆதாரில் உள்ள விவரங்களை உள்ளிட வேண்டும்.

பின்னர் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்து ‘Submit’ கொடுக்க வேண்டும்.

இறுதியாக பயனரின் விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற மெசேஜ் டிஸ்பிளே ஆகும்.

இந்த எளிய முறையின் மூலம் ஆதார் எண்-வாக்காளர் அட்டையை இணைக்கலாம்.

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback