பிரதமர் மோடியின் புதிய கார் சிறப்பம்சங்கள் என்ன ! என்ன!
பிரதமர் மோடிக்கு தற்போது புதிய கார் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. புதிய Mercedes-Maybach S 650 கார் சேர்க்கப்பட்டுள்ளது
காரின் சிறப்பம்சம்...
இந்த கார் தோட்டாக்கள் மற்றும் குண்டுவெடிப்புகளையும் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது
விபத்து ஏற்பட்டால் தானாக பெட்ரோல் டாங்க் மூடிக்கொள்ளும் வசதி உள்ளது.
விஷ வாயு தாக்குதல் ஏற்பட்டால் காரில் சுவாசிக்க செயற்கை சுவாசக் கருவியும் உள்ளது.
இந்த காரின்கண்ணாடிக்கு உட்புறம் பாலிகார்பனேட் பூசப்பட்டுள்ளது.
இந்த காரில் சேதம் அல்லது பஞ்சர் ஏற்பட்டாலும் கூட இயங்கும் வகையில் சிறப்பு ரன்-பிளாட் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மெர்டசிஸ் மேபேக் எஸ் 650 வகை கார் 6 லிட்டர் இரட்டை டர்போ வி12 இன்ஜின் பொருத்தப்பட்டது.
516 பிஹெச்பி, உச்சபட்சமாக 900 என்எம் வேகத்திலும், அதிகபட்சமாக 160 கி.மீ. வேகத்திலும் செல்லக்கூடியது.
2 மீட்டர் தொலைவில் 15 கிலோ டிஎன்டி வெடிபொருள் வெடித்தாலும் காரில் இருப்பவர்களைப் பாதுகாக்கும் அம்சம் இந்த காரில் இருக்கிறது.
காரில் உள்ள உள்ளரங்கு கதவு பாலிகார்பனேட் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
நேரடியாகத் தாக்கினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் காரின் அடிப்பாகம், கீழ்பாகம் அமைக்கப்பட்டுள்ளது.
நச்சுவாயுத் தாக்குதல் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் காரின் கேபினில் ஏர்-சப்லே ஏரியா தரப்பட்டுள்ளது.
காரின் எரிபொருள் நிரப்பும் கலன் எந்தவிதமான தீ விபத்தும் ஏற்படாத வகையில் சிறப்பு ரசாயனக் கலவை பூசப்பட்டுள்ளது.
பெட்ரோல் டேங்க்கில் ஏதேனும் துளை ஏற்பட்டாலோ அது தானாகே அடைந்துவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
காரின் டயர்கள் அதிநவீனமானவை, எந்தவிதமான சேதமும் டயருக்கு ஏற்பட்டாலும் உடனடியாக அதிலிருந்து தப்பிக்கும் வகையில் இருக்கும்.
காரில் கால் வைக்கும் பகுதி, சொகுசான உள்பகுதி, பின்பகுதி இருக்கையை மாற்றியமைத்தல் போன்றவற்றைச் செய்ய முடியும்
Tags: இந்திய செய்திகள்