Breaking News

எச்சரிக்கை: கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை உடனே அப்டேட் செய்யுங்க

அட்மின் மீடியா
0
மத்திய தொலைத்தொடர்புத்துறையின் ஒரு பகுதியான இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் சார்பில் கூகுள் குரோம் பயனாளர்களுக்கு அதி தீவிர எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 

அதன்படி, கூகுள் குரோமில் பல பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன எனவும், குறிப்பிட்ட கம்ப்யூட்டரை இலக்காக கொண்டு ரிமோட் அட்டார்கர்ஸ் தாங்கள் நினைத்ததை செயல்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கணினியில் உள்ள தனிப்பட்ட தகவல்களை அவர்களால் எளிதில் பெற முடியும் என இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT) அறிவித்துள்ளது

எனவே கூகுள் நிறுவனம், கூகுள் குரோம் தொடர்பாக புதிய வெர்சனை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்தப் புதிய வெர்சனில் பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், முந்தைய வெர்சனில் இருந்த குறைபாடுகள் சரி செய்யப்பட்டிருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது

எனவே கூகுள் குரோம் பயன்பாட்டாளர்கள் தங்கள் கூகுள் குரோம் செயலியை புதியவெர்சனுக்கு அப்டேட் செய்வதன்மூலம் ஹேக்கர்களின் ஊடுருவலிருந்து தப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளது

எப்படி அப்டேட் செய்வது?

கூகுள் குரோமின் புதிய வெர்சன் அப்டேட் செய்ய கூகுள் குரோமின் முகப்புப் பக்கத்தில் ஓரத்தில் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து Help - About Google Chrome செல்லவும். உங்களின் கூகுள் குரோம் புதிய வெர்சனுக்கு தானாகவே அப்டேட் ஆகியிருந்தால், அதில்  புதிய வெர்சனின் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இல்லையென்றால், அப்டேட் என்று ஆப்சன் இருக்கும். அதை க்ளிக் செய்து உங்கள் கூகுள் குரோமை அப்டேட் செய்து கொள்ளலாம். 

 அதேபோல் நீங்கள் மொபைல் போனில் கூகுள் குரோம் உபயோகித்தால் பிளே ஸ்டோர் சென்று கூகுள் க்ரோமை அப்டேட் செய்து கொள்ளுங்கள்

 இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் அறிக்கை

https://www.cert-in.org.in/s2cMainServlet?pageid=PUBVLNOTES01&VLCODE=CIVN-2021-0351

Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்

Share this