Breaking News

சைபர் குற்றங்களை ஆன்லைனில் புகார் செய்வது எப்படி? முழு விவரம்....

அட்மின் மீடியா
0

இணையத்தில் தவறான தகவல்களைக் கூறி ஏமாற்றுவது, 

தொலைபேசியில் அழைத்து ஏமாற்றுவது,

நம் பயனர் தகவல்களைத் திருடுவது, 

ஹேக் செய்வது.

சமூகத்தளங்களில் பாலியல் ரீதியா தொல்லை தருவது, 

வங்கிக்கணக்கில் திருடுவது, 

செயலி மூலமாகத் தகவல்களைத் திருடுவது போன்றவை சைபர் குற்றங்களாகும்

சைபர் குற்றங்கள் நிகழ்ந்தால், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இந்தவகை குற்றங்கள் நிகழ்ந்தால், அவர்கள் எந்தவித தயக்கமோ தடையோ இல்லாமல் புகார் அளிக்க தனியாக இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உங்கள் அடையாளத்தை மறைத்து (Anonymus) புகாரளிக்க முடியும்.



ஆன்லைனில் புகார் அளிக்க:-

www.cybercrime.gov.in

அதே போல் ஆன்லைனில் பணமோசடிகள் பற்றிய புகார்களை உடனடியாகத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி வசதி 155260 யில் புகார் செய்யலாம்

முதலில்மேல் உள்ல லின்ங்கை கிளிக் செய்யுங்கள்

அடுத்து வரும் முகப்பு பக்கத்தில்HOME என்பதை அடுத்து பெண்கள் / குழந்தைகள் தொடர்பான குற்றங்களைப் புகாரளித்தல் (REPORT WOMEN/CHILD RELATED CRIME) என்றும் பிற சைபர் குற்றங்களைப் புகாரளித்தல் (REPORT OTHER CYBER CRIME) என ஆகிய இரண்டு விருப்பங்கள் இருக்கும். உங்களுடை புகாருக்கு ஏற்றதை தேர்வு செய்து கொள்ளுங்கள்

அதாவது ஒரு பெண் அல்லது குழந்தை சைபர் கிரைம்- ஆல் பாதிக்கப்பட்டால், நீங்கள் பெண்கள் / குழந்தைகள் தொடர்பான குற்றங்களைப் புகாரளித்தல் என்பதை கிளிக் செய்யலாம். அதில் இரண்டு தேர்வு இருக்கும். முதலில் anonymously அதாவது உங்கள் அடையாளத்தை அடையாளத்தை மறைக்க விரும்பினால், அந்த விருப்பத்தை வேறு தேர்வு செய்யலாம் 

அடுத்து மாநிலம் செலக்ட் செய்து உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து, அதில் நீங்கள் OTP ஐப் பதிவு செய்து லாகின் ஜடி கிரியேட் செய்து  குற்றம் தொடர்பான தொடர்புடைய விவரங்களை நிரப்பவும்.

நீங்கள் புகாரை சைபர் கிரைம் தளத்தில் புகாரளித்த பிறகு உங்கள் மொபைலுக்கும், மின்னஞ்சலுக்கும் Reference எண் வரும்.தற்போதைய புகார் நிலையை எப்படிக் கண்டறிவது?Reference எண்ணை வைத்து Check Status மூலமாகத் தற்போதைய நிலையை அறியலாம்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback