இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவு : சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவின் தெற்குப்பகுதியில் உள்ள மவுமேரா தீவு அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தோனேசியாவின் மவுமேரா நகரின் வடக்குப்பகுதியிலிருந்து 100 கி.மீ தொலை இருக்கும் திமோர் நகரின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் ப்ளோரஸ் தீவில், கடற்பகுதியில் 18 கி.மீ ஆழத்தில் இன்று இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு(உள்ளூர்நேரப்படிகாலை 11.20 மணி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் 7.3 புள்ளி என ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் நில தட்டுகளின் அசைவு காரனமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.