அடுத்த 3 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழை!! வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று 10 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.இதனால் சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கி கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில்,வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மழை தொடரும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்