Breaking News

பெட்ரோல் விலை ரூ 25 குறைப்பு ஜார்கண்ட் மாநில முதல்வர் அதிரடி உத்தரவு...

அட்மின் மீடியா
0

ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைத்து அம்மாநில முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்

 

 
 
மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டுமே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்பட்டுள்லது எனவும் அறிவித்துள்ளார் மேலும் இந்த விலை குறைப்பு 2022-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் முதல் பெட்ரோல் விலை குறைப்பு சலுகை அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களின் பாதிப்பை குறைக்க டூவீலருக்கு மட்டும் பெட்ரோல் விலை குறைக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.


 

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மாநில அளவில் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் மீது 25 ரூபாய் வீதம் அரசு நிவாரணம் அளிக்க முடிவு செய்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்” என்று குறிப்பிட்டுள்ளார். 10 லிட்டர் பெட்ரோல் வரை இந்த நிவாரணம் அளிக்கப்படும். 


 


 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback