.20 ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு டிச.20-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இதுகுறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருள்மிகு மங்களநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 20-ஆம் தேதி அன்று திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாகும்.அதனை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 8-ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 8-ம் தேதி வழக்கம் போல் இயங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்