திருச்சி மாவட்டத்தில் டிச.14ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு வரும் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வரும் 14ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வரும் டிசம்பர் 18ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்