ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பிரதமர் மோடி அறிவிப்பு
பாரத பிரதமர் மோடி அவர்கள் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர்
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். 2022ஆம் ஆண்டை வரவேற்க தயாராகிக்கொண்டிருக்கிறோம். கொரோனா இன்னும் நம்மை விட்டு போகவில்லை. தற்போது பண்டிகை காலம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா இன்னும் நம்மை விட்டு விலகவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடியுங்கள். அதேசமயம் ஒமைக்ரான் தொற்றைக் கண்டு அச்சமடைய வேண்டாம்.
மேலும், நாசி வழியாக செலுத்தும் தடுப்பூசி மற்றும் உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசி இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றுகூறிய பிரதமர்
ஜனவரி 3ம் தேதி முதல், 15 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம் என்றும் கூறினார்.இவ்வாறு அவர் பேசினார்.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்