FACT CHECK: கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிடம் என்று பரவும் வீடியோ உண்மையா!!!!
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இதுதான் வாழ்க்கை கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிட CCTV வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் மயக்கம் காரணமாக படியில் வந்து அமர்ந்து, பின்னர் சுருண்டு விழுந்து உயிரிழப்பது போல் உள்ளது அவரை மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிடம் என்று பரப்புகின்றார்கள்.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் 29.10.2021 அன்று மாரடைப்பு காரணமாக இறந்தார் ஆனால் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சம்பவம் 01.09.2021 அன்று பெங்களுரில் நடந்தது ஆகும்
இதன் மூலம் சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் இளைஞர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வீடியோவை புனித் ராஜ்குமார் உயிரிழந்த காட்சி என்று தவறாக பர்ப்புகின்றார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி