FACT CHECK கேக்கில் பக்கவாத்ததை ஏற்படுத்தும் மாத்திரைகள் என ஷேர் செய்யப்படும் வீடியோ உண்மையா????
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் புதிய கேக் ஒன்று சந்தைக்கு வந்துள்ளது.அதில் லூபோ நிறுவனத்தின் டேப்லெட் செருகப்பட்டுள்ளது, இதனால் குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படுகிறது, தயவுசெய்து இந்த வீடியோவை முன்னெடுத்துச் செல்லும் வேலையைச் செய்யுங்கள்.என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
யாரோ வேண்டும் என்றே அது போல் பொய்யாக கேக்குகளில் மாத்திரை வைத்து எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்கள்
மேலும் அந்த பொய்யான செய்தி 2019 ம் ஆண்டு முதல் இணையத்தில் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு நாடுகளில் பல்வேறு தலைப்புக்களில் வலம் வந்துகொண்டு உள்ளது
அதே போல் நம் அட்மின் மீடியா போல் பல உண்மை கண்டறியும் செய்தி நிறுவனங்கள் அந்த செய்தியை பொய் எனவும் வெளியிட்டுள்ளது
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த கேக் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
https://www.youtube.com/watch?v=tvTriSXy6TE
https://teyit.org/solen-cikolataya-ait-luppo-markali-keklerin-icinden-hap-ciktigi-iddiasi
https://www.snopes.com/fact-check/turkish-snack-bar-paralysis-tablet/
Tags: FACT CHECK மறுப்பு செய்தி