Breaking News

FACT CHECK வடஇந்தியர்கள் அரிசியில் கலப்படம் செய்வதாகப் பரவும் வீடியோ.. எங்கு நடந்தது உண்மை என்ன ?

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  வட இந்தியர்களின் திட்டமிட்ட கொடூர செயல் !! அரிசியை சமைத்து சாப்பிடும் மக்களின் உடல் நலத்தை குறிவைத்து தகர்க்கும் முயற்சியில் வட இந்தியர்கள்…!! உடனே தடுத்தாக வேண்டும் !!ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கும் வரை பகிரவும்என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில், அரிசி குடோன் ஒன்றில் குவிக்கப்பட்டுள்ள அரிசியில் ஏதோ ஒரு கெமிக்கல்  போன்ற ஒன்றை கலந்து குவிக்கப்பட்டுள்ள அரிசியில் ஊற்றுவதும், அதன் பிறகு சிலர் அதனை அரிசியில் நன்றாக கலந்து  அந்த அரிசி மூட்டைகளை தயார் செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள அர்சி மூட்டையில் உள்ள La Caserita என்ற பெயரை இனீயத்தில் தேடுகையில் அது இந்தியாவில் இல்லை பெரு நாடு என காண்பித்தது 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ இந்தியாவில் நடந்தது இல்லை, மேலும் அந்த வீடியோ கடந்த 2019 ம் ஆண்டு பெரு நாட்டில் நடந்தது ஆகும்


பெரு நாட்டில் உள்ள La Caserita லா கேஸெரிட்டா  பிராண்ட் வெள்ளை அரிசியில் சாயம் கலந்து புதிய அரிசியை பழைய அரிசி போல் மாற்றுகின்றார்கள் என அந்த வீடியோவில் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.


ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=nbWO8n94WNA&feature=emb_title

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback