Breaking News

சிறைவாசி விடுதலை சம்மந்தமாக முதல்வரை சந்திந்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் முழு விவரம்....

அட்மின் மீடியா
0
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை குறித்துக் கடந்த நவம்பர் 15ஆம் தேதி அன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு பல்வேறு தரப்பினர்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
 
மேலும் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக இது குறித்து பிரத்தியேகமாக விவாதிப்பதற்காகக் கூட்டமைப்பின் அவசர கூட்டம்  நடைபெற்றது. அதில் சிறைவாசிகள் விடுதலை தொடர்பான அரசாணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 
 
அதனை அடுத்து  தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து 700 சிறைகைதிகள் அரசானை சம்மந்தமாக தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
 
அதன்படி கூட்டமைப்பின் தலைவர் மவ்லானா பி ஏ காஜா முயீனுத்தீன் பாகவி, ஒருங்கிணைப்பாளர் மவ்லவி எம் முஹம்மது மன்சூர் காஸிமி, தமுமுக தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ ஆகியோர் இன்று கூட்டமைப்பின் சார்பில் தமிழக முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தனர். 
 
அப்போது சமுதாயத்தின் உணர்வுகளை பிரதிபலித்து முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்வதின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினோம். இந்த ஆட்சியில் விடுதலை இல்லையெனில் வேறு எப்போதும் விடுதலை கிடைக்காது என்ற மனநிலையில் மக்கள் இருப்பதை எடுத்துரைத்தோம். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் முக்கிய அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர். நமது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார் என தமிழ்நாடு ஜமா அத்துல் உலமாசபை தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்கள்


  
 
 
 
 

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback