சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலை கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் நாளை அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் புதுச்சேரி – சென்னை இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் எனவும் கடலோர மாவட்டங்களில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்தார்.
மேலும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படுவதாகவும் அவர் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்