உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு இலவச சைக்கிள் நிதி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு.
உலாமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 பேருக்கு மிதிவண்டி வழங்க நிதி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
இது தொடர்பாக,பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்:
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களால் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் 4 கோடியே 76 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவித்தார்
அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க அனுமதி அளித்து,ரூ.4,76,23,000 நிதி ஒதுக்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்