கொடைக்கானலில் டெண்ட் கூடார வீடுகளுக்கு தடை
கொடைக்கானலில் நிரந்தர கட்டட அமைப்பு இல்லாமல் கூடாரம் அமைத்து தங்கும் டென்ட் ஹவுஸ், கன்டெய்னர் ஹவுஸ்களில் சுற்றுலா பயணிகளை தங்க வைக்க அரசு தடை விதித்துள்ளது
வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் நில உரிமையாளர்களும், சுறறுலா ஏற்பாட்டாளர்களும் சேர்ந்து தற்காலிக கூடாரங்கள் அமைத்து சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுக்காமல் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் டெண்ட் அமைக்க தடை உள்ளது வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் கூடாரங்களில் தங்கும் சுற்றுலாப் பயணிகளை வனவிலங்குகள் தாக்கும் ஆபத்து உள்ளது. இதனால் தற்காலிக டென்ட் ஹவுஸ் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் தடையை மீறி டென்ட் ஹவுஸ் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைத்தால் நில உரிமையாளர்கள், டெண்ட் அமைப்பவர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்