ஹஜ் பயணத்திற்க்கு சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்பட அனுமதிக்கவேண்டும் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்
தமிழ்நாட்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் விமானம் ஏறும் இடமாகச் சென்னையில் இருந்து 700 கி.மீ தொலைவில் உள்ள கொச்சி அறிவிக்கப்பட்டுள்ளதை மாற்றி, வழக்கம்போலச் சென்னையில் இருந்தே புறப்பட அனுமதிக்கவேண்டும் என பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதம்
2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளிலிருந்து 4500 க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்திரீகர்கள் சென்னையிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்று வந்துள்ள நிலையில், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்தும் யாத்திரீகர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர் என்றும் தமிழ்நாட்டை சேர்ந்த யாத்திரீகர்கள் விமானம் ஏறும் இடமாக தற்போது கேரளாவில் உள்ள கொச்சின் விமான நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது. யாத்திரிகர்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
லும் இதுகுறித்து தனக்கு ஏராளமான கோரிக்கைகள் இஸ்லாமிய சமூகத்தினர் பொதுமக்கள் பல்வேறு அரசியல் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக பெறப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ஹஜ் யாத்திரை பெரும்பாலான யாத்திரீகர்களுக்கு சவாலாக உள்ள நிலையில் சென்னையில் இருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொச்சி நகரில் புறப்படும் இடமாக அறிவிக்கப்பட்டதை மாற்றி யாத்திரீகர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்து , இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாக விளங்கும் சென்னை விமான நிலையத்தில் இருந்து தொடர்ந்து வழக்கம்போல புறப்படும் வகையில் அனுமதி வழங்கி தொடர்புடைய துறையினருக்கு அறிவுறுத்துமாறு பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்
Tags: தமிழக செய்திகள்