இனி கல்லூரிகளில் வாரத்தில் 6 நாட்களும் நேரடி வகுப்புகள் தான் -உயர் கல்வித்துறை
கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மாணவர்களின் படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் ஆன்லைன் வழியாகவே செமஸ்டர் தேர்வுகளும் நடத்தப்பட்டன.
இதனையடுத்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்கள் தவிர்த்து, மற்ற ஆண்டு மாணவர்களுக்கு 50 சதவீத சுழற்சி முறையில் வாரம் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதாவது பாதி பேர் ஆன்லைன் வழியாகவும், மீதமுள்ளவர்கள் நேரடி வகுப்பிலும் கலந்துகொண்டனர்.இந்நிலையில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும்வகுப்புகள் தொடங்கப்பட்டது
இந்நிலையில் தற்போது கல்லூரிகள், பல்கலைகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத் திட்டங்களை வழங்கிட வேண்டும். ஜன.,20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள், அதற்குமுன் மாதிரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த வேண்டும்.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்