Breaking News

அடுத்த 3 மணிநேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழை வானிலைஆய்வுமையம் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 



வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ள நிலையில்,இன்று முதல் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர்,கடலூர்,விழுப்புரம்,பெரம்பலூர்,அரியலூர்,நாமக்கல்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,தூத்துக்குடி,நெல்லை,கன்னியாகுமரி,தஞ்சை,திருவாரூர்,நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Share this