ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு – முதல்வர் அறிவிப்பு!
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, ‘தமிழர் திருநாளான தைப்பொங்கலை கொண்டாட ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புகளை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதன் கீழ், பொங்கல் வைக்கத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களுடன் பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய 20 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு சுமார் 2,15,48,060 குடும்பங்களுக்கு வழங்கப்படும். இதற்காக ரூ.1,88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்