Breaking News

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

1 முதல் 8ம் வகுப்பு வரை நாளை முதல் அரைநாள் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. .இந்நிலையில் கல்வியமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், "தொடர் மழையால் நாளையும், நாளை மறுநாளும்  9 முதல் 12ம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. 

அதேபோல் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் நாளை (8ம் தேதி) திறக்கப்பட இருந்தது. மழையின் காரணமாக அவ்வகுப்புகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. மழையின் தன்மை பொருத்து 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு பற்றி பின்னர் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback