Breaking News

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி அவசியம் படிங்க

அட்மின் மீடியா
0

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி: ஒருமுறை படித்துவிட்டு அப்பரம் வெடிங்க 

 


 

  • பாலியஸ்டர் ஆடைகளை தவிர்த்து எளிமையான கதர், காட்டன் டிஷர்ட் , அல்லது காட்டன் ஆடைகளை அணிவது நல்லது. 

 

  • சிறுவர்கள் தனியாக பட்டாசு வெடிக்காமல்  பெரியவர்களின் மேற்பார்வையில்,முடிந்தவரை திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 

 

  • பட்டாசு வெடிக்கும்போது அருகில் மணல், தண்ணீர் பக்கெட்டுகளையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் நீளமான ஊது பத்திகளை பயன்படுத்த வேண்டும். 

 

  • தீப்பெட்டி மற்றும் மெழுகுவர்த்தி மூலமாக பட்டாசுகளை வெடிக்க செய்யாதீர்கள். 

 

  • வெடிகளை கையில் வைத்து வெடிக்கக் கூடாது.மேலும் பட்டாசுகளை கொளுத்தி மற்றவர்கள் மீதோ, தெருவிலோ வீசி விளையாடுவதை தவிர்க்க வேண்டும். 

 

  • பட்டாசு வெடிப்பதில் கவனக் குறைவு கூடாது. மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் மிகுந்த கவனத்துடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 

 

  • ஈரமுள்ள பட்டாசுகளை அடுப்பில் வைத்து உலர்த்தக் கூடாது வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக்கூடாது அதன் மீது தண்ணீர் ஊற்றி விடுங்கள் 

 

  • மத்தாப்புகளை கொளுத்தி முடித்த பின்னர் கால்வாயிலோ அல்லது அருகில் வைக்கப்பட்டிருக்கும் பக்கெட் தண்ணீரிலோ போட வேண்டும். 

 

  • பட்டாசு கடைகள், கேஸ் கிடங்குகள், உணவுப்பொருள் சேமிப்பு கிடங்குகள், வைக்கோல் போர், மருத்துவமனை, பெட்ரோல் பங்கு, மின்சார டிரான்ஸ்பார்மர், மார்க்கெட் பகுதிகளில், பட்டாசு வெடிக்கக்கூடாது. 

 

  • உடலில் தீப்பிடித்தால் பயந்து ஓடாமல், தீப்பிடித்த இடத்தில் தண்ணீரை ஊற்றி, காயத்தின் மீது மெல்லிய துணியால் மூடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback