Breaking News

பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும்- சென்னை ஐகோர்ட்டு அதிரடி

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 



அரக்கோணம் தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் அரசின் அனுமதி பெறாமல் புறம்போக்கு நிலத்தில் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை அகற்றும்படி தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்சாலைகளில் சிலைகளை வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு இருப்பதால், சிலையை அகற்றியதில் தவறில்லை' என்று கூறினார். 

இதனை ஏற்றுக்கொண்ட  நீதிபதிகள் தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகள், புறம்போக்கு நிலங்கள், அரசு நிலங்களில் உள்ள தலைவர்கள் சிலைகளை மூன்று மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும். என உத்தரவிட்டார்

மேலும்,பொதுமக்கள் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதிகளை வகுக்கவேண்டும் எனவும் இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.

Tags: தமிழக செய்திகள்

Share this