Breaking News

அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு



தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று வட கடலோர மாவட்டங்கள் , கன்னியாகுமரி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி ,கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

08.10.2021 நாளை வட மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

09.10.2021 நாளை மறுநாள் வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய கூடும். 

10.10.2021 மற்றும் 11.10.2021  ஆகிய தேதிகளில்  உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் வரும் 10ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback