Breaking News

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது

 


தீபாவளி பண்டிகை அக்டோபர் 4 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் ஆர்வ மிகுதியால் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ரயில்களில் பட்டாசுக்களை எடுத்து செல்கின்றனர். இதனால், ரயில்களில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இதனால்  ரயில்வே பாதுகாப்புபடை போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால், மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே போலீஸார் எச்சரித்துள்ளனர். 

ரயில்களில் பயணிகள் பட்டாசுகளை எடுத்து செல்லக்கூடாது. பட்டாசுகளை எடுத்து சென்றால், ரயில்வே சட்டம் 164-இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது, ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால், மூன்றாண்டு சிறை, ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனை பெற நேரிடும் மேலும் புறநகர் ரயில் நிலையங்களில், 24 மணி நேரமும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணியரின் உடைமைகளை சோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback