Breaking News

தமிழக அரசின் 25,000/- பரிசுபணம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 1 முதல் 8 வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளி நேரத்துக்குப் பின்னா் அவா்கள் வசிப்பிடத்திற்கு அருகில் சிறு குழுவாக ஒருங்கிணைத்து கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இந்தத் திட்டத்தில் சேவையாற்ற விருப்பமுள்ள 38 மாவட்டங்களில் உள்ள தன்னாா்வலா்கள் அனைவரும் தங்கள் விவரங்களை illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.



இல்லம் தேடிக் கல்வித் திட்டத்துக்கான லோகோ மக்கள் பங்கேற்புடன் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக லோகோ (logo with tag line) உருவாக்கும் போட்டி நடத்தப்படவுள்ளது. 

இதில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவா்கள், பெண்கள், ஓய்வு பெற்ற ஊழியா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை.

போட்டியாளா்கள் தங்களின் படைப்பினை illamthedikalvi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் அக்.24-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 



போட்டியாளா்களால் தயாரித்து வழங்கப்படும் லோகோ ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் இறுதி செய்யப்படும். சிறந்த மற்றும் பொதுமக்களுக்கு எளிதில் புரிந்திடும் வகையிலான சின்னத்தை உருவாக்கும் ஒரு வெற்றியாளருக்கு ரூ.25,000 , பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:-

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdTnFCiWdqMCuwm_gvn3mCQbdRFPpLeD4me3Z_VEUyp-oc7sQ/viewform

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback