Breaking News

17 ஆண்டுகளாக நடுகாட்டில் தனியாக அம்பாசிடர் காரில் வாழ்ந்து வரும் மனிதர்

அட்மின் மீடியா
0

கர்நாடக மாநிலம் மெக்ராஜே லோ கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கடந்த 2003-ம் ஆண்டு கூட்டுறவு வங்கியில் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கினார். அதன் பிறகு இந்தக் கடனை அவரால் அடைக்க முடியவில்லை.இதனால் அவருக்குச் சொந்தமாக இருந்து 1.5 ஏக்கர் நிலத்தை வங்கி ஏலத்தில் எடுத்துக் கொண்டது. இதனால் மிகவும் மனமுடைந்த இவர்  அருகில் உள்ள  காட்டில் அவரது அம்பாசிடர் காரில் குடிபெயர்ந்தார். இப்படி நாட்கள் கடந்து வ்ருடங்கள் ஆகி 17 ஆண்டுகளாக வசித்து வருகின்றார்



காட்டில் கிடைக்கும் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி கூடைகளைச் செய்து அவற்றை அருகே இருக்கும் கிராம மக்களுக்கு  கொடுத்து அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை போன்ற மளிகைப் பொருட்களைப் பண்டமாற்று முறையில் வாங்கி தன்னுடைய தினசரி வாழ்க்கையை நடத்தி வருகிறார்

Tags: இந்திய செய்திகள்

Share this