FACT CHECK வடமாநிலத்தில் நதியில் குளித்ததால் பெண்னை அடிக்கின்ற வீடியோ உண்மை என்ன...
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் வடமாநிலத்தில் நதியில் தலித் பெண் குளித்ததற்க்காக அடிக்கும் வீடியோ காட்சி என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
எங்கு நடந்தது
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 22 ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் அந்த பெண் நதியில் குளித்ததற்க்காக அடிக்கவில்லை
காரணம் என்ன
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள் பெண்ணை அவர்கள் நதியில் குளித்ததற்க்காக அடிக்கவில்லை மேலும் அந்த பெண்ணை அடிப்பவர்கள் அனைவரும் அந்த பெண்ணின் உறவினர்கள் தான்,
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் தங்கள் தாய் மாமாவின்
மகன்களுடன் தொலைபேசியில் பேசியதற்காக அவர்களது குடும்ப உறுப்பினர்களால்
கொடூரமாக தாக்கப்பட்டனர்
முடிவு
தற்போது பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சம்பவம் தலித் பெண் நதியில் குளித்தற்க்காக தாக்கபடவில்லை மாறாக தன் தாய்மா மகன்களுடன் அந்த பெண் போனில் பேசியதால் தன் குடும்ப உறுப்பினர்களால் தாக்கப்பட்டார் எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
TAGS
Women Beaten With Sticks By Family
Videos of tribe women being beaten by their families
ADMIN MEDIA FACT CHECK
FACT CHECK TAMIL
ADMIN MEDIA
FAKE NEWS VIRAL VIDEO
Tags: FACT CHECK மறுப்பு செய்தி