BREAKING: பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அமரிந்தர் சிங்!
அட்மின் மீடியா
0
BREAKING: பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அமரிந்தர் சிங்!
பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது ராஜிநாமா கடிதத்தை அமரீந்தர் சிங் அளித்துள்ளார்.
மேலும், தனது தலைமையிலான அமைச்சரவையின் ராஜிநாமா கடிதத்தையும் ஆளுநரிடம் அளித்தார் அமரீந்தர் சிங்.
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்கு இன்று மாலை அழைப்பு விடுத்திருந்த நிலையில், கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே, தனது முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜிநாமா செய்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்