Breaking News

மாநிலங்களவை உறுப்பினராக எம்எம் அப்துல்லா போட்டியின்றி தேர்வு தேர்தல் அதிகாரி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தை சேர்ந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகம்மது ஜான் கடந்த மார்ச் மாதம் காலமானார். 


இதற்கு முன்னதாக காலியாக இருந்த 2 இடங்களையும் சேர்த்து மொத்தம் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக இருந்தது. இதில் ஒரு இடத்துக்கு மட்டும் செப்டம்பர் 13ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிட உள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, திமுக வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவின் இணைச் செயலாளராக உள்ளார்.
 
திமுக நாடாளுமன்றத்தில் போதிய பலத்தோடு உள்ளதால், எம்.எம்.அப்துல்லா எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்நிலையில்  தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் மாநிலங்களவை எம்.பி.யாக திமுக வேட்பாளர் அப்துல்லா போட்டியின்றி தேர்வானதாக அதிகாரப்பூரமாக அறிவித்துள்ளார். இதற்கான சான்றிதழையும் அப்துல்லாவிடம் வழங்கினார். 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback