இதய செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆசையை நிறைவேற்ற தன் கடை விளம்பரத்தில் நடிக்கவைத்த மலபார் கோல்டு வைரல் வீடியோ!!!
இதய செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆசையை நிறைவேற்ற தன் கடை விளம்பரத்தில் நடிக்கவைத்த மலபார் கோல்டு வைரல் வீடியோ!!!
தன்யா ஜோசின்
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த 21 வயதான தன்யா ஜோசினுக்கு மாடலிங் துறையில் சென்று சாதிக்க வேண்டும் என்பது லட்சியம். தனது மேற்படிப்புக்காக கனடா சென்று படித்து வந்த தன்யாவின் கனவை கலைத்தது அவருக்கு வந்த இருதய செயல் இழப்பு நோய்
இதய செயலிழப்பு நோய்
திடிரென ஏற்பட்ட உடல் நல குறைவால் மருத்துவமனை சென்ற அவருக்கு அங்கு மருத்துவர்கள் தன்யா ஜோசினுடைய இதயம் 20%மட்டுமே செயல்படுவதாக தெரிவித்தார்கள்
தன்னம்பிக்கை எதனையும் சாதிக்கும் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்க. நம் மீதானநம்பிக்கை போதும் நாம் தடுமாறும் போதெல்லாம், நம்மைத் தூக்கி நிறுத்துவது நம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கை இருக்கும் ஒருவரால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். என்பதற்க்கு எடுத்துக்காட்டாக துவண்டு போகாத தன்யா நம்பிக்கையுடன் சிகிச்சை பெற்றார்.
அதன் பின் தன்னுடைய புகைப்படங்களையும் தனது வாழ்வில் நிகழும் அனைத்து சிறப்பான தருணங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார்.
வாழ்க்கையை மாற்றிய விளம்பரம்.
கனடாவில் இருந்து கேரளாவிற்கு திரும்பிய தன்யாவின் கண்ணில் மலபார் ஜிவெல்லர்ஸின் மணப்பெண் விளம்பரம் தென்பட்டது. இதனை பார்த்தவுடன் தானும் இது போன்ற விளம்பரத்தில் தங்க நகைகள் அணிந்து நடிக்க விரும்புவதாகவும் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதனை மலபார் ஜிவெல்லர்ஸிக்கு டேக் செய்து இருந்தார்.
அதற்கு பதில் அளித்த மலபார் ஜிவெல்லரி போட்டோ ஷூட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தது. 2021ம் ஆண்டுக்கான பிரைட் ஆப் இந்தியா என்ற விளம்பரத்தில் நடிக்கவும் தன்யாவுக்கு மலபார் ஜிவெல்லரி வாய்ப்பு அளித்துள்ளது
ஸ்பெஷல் பிரைட் ஆப் இந்தியா என்ற பெயரில் தன்யாவின் விளம்பர வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்ததுள்ளது
மணப்பெண் தோற்றத்தில் முகம் முழுக்க புன்னகையுடனும் ஜொலிக்கும் தங்க நகைகளுடன் வலம்வந்த தன்யா சோஜனின் விளம்பர வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த விளம்பரத்தை நீங்கள் பார்க்க:-
https://www.youtube.com/watch?v=A-2NNNAw59I
Tags: வைரல் வீடியோ