Breaking News

கொரோனா பொய்யான தகவல்களை பரப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்! ஆய்வு அறிக்கை

அட்மின் மீடியா
0

கொரானா பற்றி சமூக வலைதளங்களில் பொய்யான  தகவல்கள் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.‘



உலகம் முழுவதும் கொரோனா தொடர்பாக பரவிய வதந்திகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் மட்டும் 18.07 சதவீதம் வதந்திகள் பரவியுள்ளது என்று ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

138 நாடுகளில் பகிரப்பட்ட 9,657 தவறான தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நாடுகளில் கொரோனா குறித்து பகிரப்படும் தவறான செய்திகள் உண்மையானதா அல்லது பொய்யானதா என கண்டறியும் வகையில் 94 அமைப்புகள் இந்த ஆய்வில் ஈடுபட்டன. 

இதில், இந்தியாவில் 18.07% சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பியது கண்டறியப்பட்டு இந்தியா முதலிடத்தில் உள்ளது.

அதிக இன்டர்நெட் வசதி, இன்டர்நெட் பற்றிய குறைவான அறிவு ஆகிய காரணங்களால் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்ததாக அமெரிக்கா 9.74 சதவீதமும், பிரேசில் 8.57 சதவீதமும், ஸ்பெயின் 8.03 சதவீதம் வதந்திகளை பரப்பியுள்ளன.

84% வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியதாகவும், அதில் 66.87% பேஸ்புக் மூலம் பரவியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback