Breaking News

9 மாவட்டங்களில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் அதிகாரபூர்வ அறிவிப்பு முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் அக்.6 ம் தேதி மற்றும் அக்.9 ம் தேதி இரண்டு கட்டமாக 9 மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார். அதன்படி

 

வேட்புமனுத்தாக்கல்:-

செப்டம்பர் 15ம் தேதி முதல் 

 

வேட்புமனுத்தாக்கல்முடிவு:-

செப்டம்பர் 20ம் தேதி

 

வேட்புமனு பரிசீலனை:-

செப்டம்பர் 23 தேதி

 

வேட்புமனு திரும்ப பெறுதல்:-

  செப்டம்பர் 25 தேதி

 

தேர்தல் நாள்:-

அக்.6 ம் தேதி முதல் கட்டம்

மற்றும் 

அக்.9 ம் தேதி இரண்டாம் கட்டம்


வாக்கு எண்ணிக்கை நாள்:-

அக்டோபர் 12ஆம் தேதி

 

 இந்த 9 மாவட்டங்களில் நடக்கும் உள்ளாட்சி தேர்தல் வாக்குசீட்டு முறையில் நடைபெறும் எனவும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும்கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்

அதேபோல் 9 மாவட்டங்களுக்கு தனித்தனி ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்

வாக்குப்பதிவு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்; வெப் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்தெரிவித்துள்ளார்



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback