Breaking News

தமிழக அரசு வழங்கும் ரூ.7000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழக அரசு வழங்கும் ரூ.7000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!முழு விவரம்



2021, 2022 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை இளம் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, மருத்துவக்கல்வி, பி.இ, பிடெக்., பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் ஆயிரம் முதல் ரூபாய் 7000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் http://www.chennai.nic.in/ என்ற இணையதளத்தில், அரசுத்துறைகள், மாற்றுத்திறனாளிகள் நலன் என்ற பகுதியில் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் அல்லது கல்விநிலைய முதல்வர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட சான்றுகளுடன் இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ்.வளாகம், தேனாம்பேட்டை, சென்னை - 600006 என்ற முகவரியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் 2021-2022ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் மூலம் ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி பயில்பவர்களுக்கு ரூபாய் 7000 முதல் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு scholorship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேற்படி விண்ணப்பங்கள் 15.11.2021க்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/09/2021090911.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback