Breaking News

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிப்பு தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிப்பு  தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்


கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31-வரை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

3வது அலை உருவாவதை தடுக்க பொதுமக்கள் பண்டிகைகளை தங்களது இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும்

பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்; கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்

கொரோனாவை தடுக்கும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி 3வது அலை தமிழ்நாட்டில் ஏற்படாத வண்ணம் தடுக்க உதவ வேண்டும்

தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகள் அரசால் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்று சூழலில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் மட்டும் உரிய சமூக இடைவெளியைக் கடைபிடித்து மாலை அணிவிக்க அனுமதிக்கப்படுகிறது. மரியாதை செலுத்தப்படும் தலைவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்கள் மிகாமல், பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் 5 நபர்களுக்கு மிகாமல் சம்பந்தப்பட்ட ஆட்சித் தலைவரிடம் முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான அனுமதியைப் பெற்று அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உரிய சமூக இடைவெளியைக் கடைபிடித்து மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback