இந்தியாவில் உள்ள போர்டு கார் ஆலை மூடல்? 2000 ஊழியர்கள் நிலை
அட்மின் மீடியா
0
சென்னையை அடுத்துள்ள மறைமலைநகரில் உள்ள போர்டு நிறுவனத்தின் கார் தொழிற்சாலையை மூட அந்நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு தமிழ்நாட்டில் மறைமலை நகர் பகுதியில் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.இந்த ஆலை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் அந்த ஆலையை மூட அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது
மறைமலைநகரில் உள்ள போர்டு நிறுவனத்தில் மட்டும் 2000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது இந்த முடிவால் சுமார் 2,000 ஊழியர்களுக்கு வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்