FACT CHECK, உங்க வதந்திக்கு அளவே இல்லையா!! 6 நம்பர்,13 நம்பரில் போன் அட்டன் பன்னா வெடிக்குமா
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஹாய் பிரண்ட்ஸ், இப்போ நம்ம தமிழ்நாட்டுல ஏதோ புதுசா ட்ரெண்ட் பண்ணுறங்கலாம். ஏதோ 13 நம்பரில் இருந்து, 6 நம்பரில் இருந்து கால் வந்தா அட்டன் பண்ண இரண்டாவது செகண்ட் செல்போன் வெடிக்குதாம். தூக்குதுக்குடியில 27 பேருக்கு பண்ணிருக்காங்கனு எனக்கு ஒரு ஃபார்வர்டு மெஜேஜ் வந்துச்சு. அதேபோல், சென்னையில இருந்து ஒரு நண்பர் பேசி அனுப்பி இருக்காரு, சிங்கப்பூரில் இருக்கிற என் பிரண்ட்ஸ் ஷேர் பண்ணாங்க. உங்களால் முடிஞ்ச வரைக்கும் ஷேர் பண்ணுங்க !! என்று ஒரு ஆடியோ மற்றும் புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
உங்க வதந்திக்கு அளவே இல்லையா திருந்தமாட்டீங்களா
6 நம்பர் மற்றும் 13 நம்பர் எண்கள் கொண்ட நம்பரில் போன் அட்டன் பன்னா வெடிக்கும் என்பது வதந்தியே. அது போல் 6 நம்பர் 13 நம்பரில் போன் வந்து போன் வெடித்தாக சம்பவம் எங்கும் நடக்கவில்லை என்பதே உண்மை
பொதுவாக போன் சார்ஜ் போடும் போது வெடித்ததாகவும் சார்ஜ் போட்டு கொண்டே போன் பேசும் போது வெடித்ததாகவும் நடந்துள்ளது
ஆனால் தற்போது இந்த வதந்தி கடந்த பல ஆண்டுகளாகவே பரப்பப்பட்டு வருகிறது. 2017 மற்றும் 2018 ம் ஆண்டிலும் இதே ஆடியோ வேறு புகைபடங்கள் மூலம் பரவியது அப்போதும் நம் அட்மின் மீடியா மறுப்பு செய்தி வெளியிட்டு இருந்தது
மேலும் தற்போது பலரும் ஷேர் செய்யப்படும் புகைப்படமும் பொய்யானது ஆகும். அந்த ஆடியோவிற்க்கும் புகைபடத்திற்க்கும் சம்மந்தம் இல்லை
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் 03.08.2021 அன்று ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் இசேவை நடத்தி வரும் அதிமுக பிரமுகரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அரிவாளால் தாக்கி கொலை செய்தபுகைபடம் ஆகும்
ஆனால் அந்த புகைபடத்தை வைத்து பழைய ஆடியோவையும் சேர்த்து வதந்தி பரப்புகின்றார்கள்
இது போல் ஆதாரமற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியா ஆதாரம்:
2017 ல் அட்மின் மீடியா மறுப்பு செய்தி:
போன் அட்டன் பன்னா வெடிக்குமா
2018 ல் அட்மின் மீடியா மறுப்பு செய்தி:
6 நம்பர் 13 நம்பர் அழைப்பு வந்தா போன் அட்டன் பன்னா வெடிக்குமா உண்மை என்ன?
Tags: FACT CHECK மறுப்பு செய்தி