ஒலிம்பிக் அடுத்த பதக்கம் வென்ற இந்தியா குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லவ்லினா
ஒலிம்பிக் குத்துச்சண்டை இந்திய வீராங்கனை லவ்லினாவுக்கு வெண்கலம்
டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் வெண்கலப் பதக்கம் வென்றார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சீனா தைப்பேவின் நியென் சின் சென்னை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்,
இரண்டு முறை உலக சாம்பியன் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற அசாமை சேர்ந்த லவ்லினா. அரையிறுதி போட்டியில் அவர், துருக்கியை சேர்ந்த உலக சாம்பியன் சுர்மெனெலி புசெனாஸிடாவை எதிர்த்து 69 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார்.
இந்த போட்டியில் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் துருக்கி வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார் லவ்லினா.
Tags: இந்திய செய்திகள்