பள்ளிகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம்
தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9,10,11,12 வகுப்புக்கு பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது
ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 100% தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
முதல் நாளில் 50% மாணவர்களும், மறு நாள் எஞ்சிய 50% மாணவர்களுக்ம் மாறி மாறி பள்ளிக்கு வர வேண்டும்
வகுப்புகளை சூழலுக்கு ஏற்ப திறந்த வெளியிலும் நடத்தலாம்
பள்ளிகளில் கை கழுவுவதற்கு கிருமிநாசினி, சோப்பு உள்ளிட்டவை வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மாணவர்கள் அனைவருக்கும் விட்டமின் சி மாத்திரை நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும்
கொரோனா அறிகுறி உள்ள ஆசிரியர்களையும் மாணவர்களையும் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது
முகக்கவசம் அணிதல், அவ்வப்போது கைகளை சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப் பட வேண்டும்.
பள்ளிகளை திறப்பதற்கு முன்பே வளாகங்களை சுத்தப்படுத்தி இருக்க வேண்டும்
பள்ளிகள் திறந்து ஒரு வாரத்துக்குள் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் 6 அடி இடைவெளியில் அமர்ந்து இருக்குமாறு இருக்கைகள் அமைக்க வேண்டும்.
உடல் வெப்ப பரிசோதனைக்குப் பிறகே மாணவர்களை அனுமதிக்க வேண்டும்
கொரோனா நோய் அறிகுறி உள்ள ஆசிரியர்களோ, மாணவர்களோ பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்க கூடாது.
மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி தெரிந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உடனே தகவல் அளிக்க வேண்டும்
என கொரோனா முன்னெசரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்