Breaking News

அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம்: கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு!

அட்மின் மீடியா
0

 அரசு மற்றும் கலை கல்லூரிகளில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது


அரசு கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கும் என்றும் செப்டம்பர் 3-ஆம் தேதி மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

மேலும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து கல்லூரிகளும் கடைபிடிக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 

பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள் சரிபார்ப பின்னர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback