Breaking News

தமிழகத்தை பிரிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு விளக்கம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் விளக்கம் அளித்துள்ளார்.

 


சமீபத்தில்,தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்குநாடு உருவாக்கப்படும் என்ற சர்ச்சை கிளம்பி அரசியல் கட்சிகள் மத்தியில் பல எதிர்ப்புகள் உருவாயின.

இந்நிலையில்,தமிழ்நாட்டை பிரிக்கும் ஏதேனும் திட்டம் இருக்கிறதா?,இதன் உண்மைத்தன்மை என்ன? என்று மக்களவை எம்பிக்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் ஆகியோர் எழுத்து பூர்வமாக முன்வைத்த கேள்வி எழுப்பினர்.

இதற்கு,பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்,தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் தற்போது பரிசீலனையில் இல்லை.மேலும்,கொங்குநாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்குவது தொடர்பான எந்த திட்டமும் இல்லை என்று தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

இதன் மூலம், கொங்குநாடு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 


 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback