திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்....
அட்மின் மீடியா
0
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல் கூடுதலாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பால் மற்றும் மருந்தகம் தவிர மளிகைக் கடைகள், காய்கறிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படவேண்டும்
மேலும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூப்பர் மார்க்கெட்கள், வணிக வளாகங்கள், இறைச்சி கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது
கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்கவேண்டும், இல்லையெனில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் கூறினார்.
மேலும் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி மட்டுமே செயல்படும்
Tags: தமிழக செய்திகள்