Breaking News

பெட்ரோல் வண்டிகளுக்கு மாற்றாக இருக்ககூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்.!

அட்மின் மீடியா
0
பெட்ரோல் வண்டிகளுக்கு மாற்றாக இந்தியாவில் தற்போது கிடைக்க கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்.!
 
 

 

ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பம்சம்:-

ஹீரோ ஆப்டிமா ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்ய 8 முதல் 10 மணி நேரம் ஆகும். 

இதன் வேகம் மணிக்கு 25 கி.மீ. ஆகும்

இந்த ஸ்கூட்டர் சிங்கிள் சார்ஜிற்குப் பிறகு, 50 கி.மீ தூரத்தை கடக்க முடியும். இது மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. 

மேலும் தெரிந்து கொள்ள:- https://heroelectric.in/

 

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பம்சம்:-

ஒரு முறை சார்ஜ் செய்தால் 181 கி.மீ., வரை செல்லும்

அதிகபட்ச வேகம் 115 கி.மீ

8.5 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் 

3.9 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி

மொபைல் செயலி மூலம் இயக்கலாம். 

50 சதவிகிதம் சார்ஜ் செய்தாலே 75 கிலோ மீட்டர் வரை இதில் பயணிக்கலாம் 

இரண்டு ஹெல்மெட்டுகளை வைக்கும் அளவு பெரிய பூட் ஸ்பேசுடன் வடிவமைக்கப்பட்டுள்லது

வீட்டில் முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் ஆகும்

ஓலாவின் ஹைப்பர் சார்ஜர் நிலையங்களில் 40 நிமிடங்களில் முழு சார்ஜ் ஆகும்

மேலும் தெரிந்து கொள்ள:-  https://olaelectric.com/

 

ஏதர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பம்சம்:-


ஒரு முறை சார்ஜ் செய்தால் 116 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல கூடியது 

அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தை வழங்கும் 

2.61 கிலோவாட் பேட்டரி திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர், 3 மணிநேரம் 35 நிமிடங்களில் 80% வரை சார்ஜஆகும்

டச்ஸ்கிரீன் டேஷ்போர்டு கொண்டுள்ளது. 

ஆன் - போர்டு நேவிகேஷன் சிஸ்டம் உள்ளது.

ரிவர்ஸ் அசிஸ்ட், 

பாஸ்ட் சார்ஜிங் மோட்-டில் ஒரு மணி நேரத்திற்கு சார்ஜிங் செய்தால், 80% சார்ஜிங் ஆகிவிடும். 


மேலும் தெரிந்து கொள்ள:-https://www.atherenergy.com/

 

பஜாஜ் சேதக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பம்சம்:-

2.9 kWh பேட்டரியுடன், ஒரு முறை சார்ஜ் செய்தால் Eco மோடில் இந்த ஸ்கூட்டர் 95 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும்.

மேலும் பஜாஜ் சேதக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் எ

லித்தியம் அயன் பேட்டரி 7 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

இகோ, ஸ்போர்ட் என இருவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.

செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புறம் சிங்கில் ஆர்ம் யூனிட், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. 

பிரேக்கிங்கிற்கு டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் தெரிந்து கொள்ள:-  https://www.chetak.com/

 

டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர் சிறப்பம்சம்:-

டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது அதிகபட்சமாக மணிக்கு 78 கிமீ வேகத்தில் செல்லும். 

ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை போகலாம். 

இந்த ஸ்கூட்டரில் 1.4 kWh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

5 மணி நேரத்தில் 80% சார்ஜ் ஏறிவிடும்.

மணிக்கு 78 கி.மீ வேகத்தில் செல்லும்

சார்ஜிங் முடிந்ததும் தானாக கட்-ஆஃப் செய்யப்பட்டு விடும். 

மேலும் தெரிந்து கொள்ள:-https://www.tvsmotor.com/iqube

 

ஒகினவா  ஸ்கூட்டர் சிறப்பம்சம்:-

 ஒகினவா ஐபிரெய்ஸ் பிளஸ் 

ஒகினவா பிரெய்ஸ் ப்ரோ 

ஒகினவா ரிட்ஜ் பிளஸ் என மூன்று மாடல்கள் உள்ளது

பின்னால் அமர்பவருக்கு சொகுசாக இருக்கும் விதத்தில் பேக்ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது

72V/ 45Ah திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. 

பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்வதற்கு 6 முதல் 8 மணிநேரம் பிடிக்கும். 

இந்த ஸ்கூட்டர் டர்போ மோடில் மணிக்கு 75 கிமீ வேகம்

ஸ்போர்ட் மோடில் 60 கிமீ வேகம்

ஈக்கோ மோடில் 35 கிமீ வேகம்

மூன்று ஆண்டுகள் வாரண்டி

மேலும் தெரிந்து கொள்ள:- https://okinawascooters.com/

 

பிகாஸ் ஸ்கூட்டர் சிறப்பம்சம்:-

ஏ2 மற்றும் பி8 என இரண்டு புதிய மின்சார ஸ்கூட்டர் மாடல்கள் உள்ளது

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், 

இன்டர்நெட் வசதி, 

சிறந்த மின்னணு பொறியியல் அம்சங்கள்

ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 75 கிமீ தூரம் செல்லும்

லீட் ஆசிட் பேட்டரி அல்லது லித்தியம் அயான் பேட்டரி கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.

பாக்கெட்டில் சாவியை வைத்திருந்தால் பொத்தானை அழுத்தி ஸ்டார்ட்

பார்க்கிங் வளாகங்களில் ஸ்கூட்டர் எங்கு நிற்கிறது என்பதை எளிதாக கண்டறிவதற்கான 'ஃபைன்டு யுவர் ஸ்கூட்டர்' தொழில்நுட்ப வசதி, 

தூரத்தில் இருந்தே பூட்டி திறப்பதற்கான வசதியை அளிக்கும், ரிமோட் லாக் மற்றும் அன்லாக் வசதி, 

வேகத்தை அதிகரிப்பதற்கான பூஸ்ட் ஸ்பீடு வசதி, 

மின்மோட்டார் திருடு போவதை தவிர்ப்பதற்கான பூட்டு வசதி, 

ஸ்கூட்டர் திருடு போவதை தவிர்ப்பதற்கான ஆன்ட்டி தெஃப்ட் அலாரம் 

மேலும் தெரிந்து கொள்ள:- https://www.bgauss.com/

 

ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பம்சம்:-


60V, 30Ah லித்தியம் ஐயன் பேட்டரி

பாஸ்ட் சார்ஜிங் 5-6 மணி நேரத்தில் ஃபுல் சார்ஜ் ஆகிவிடும்

Anti Theft Alarm, 

Find my scooter, 

Limp home feature

சாவியிலேயே ஸ்கூட்டரை ஆன், ஆஃப் செய்து கொள்ளலாம்

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 65 கிமீ தூரம் முதல் 90 கிமீ தூரம்வரை செல்லும்

 

மேலும் தெரிந்து கொள்ள:- https://amperevehicles.com/

 

கோ க்ரீன் போவ் ஸ்கூட்டர் சிறப்பம்சம்:-

கோக்ரீன்போவ் நிறுவனத்தின் சிறந்த ஸ்கூட்டர்கள் சந்தையில் கிடைக்கின்றன,

பாஸ்ட் சார்ஜர் கொண்டு மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்குள் சார்ஜ் செய்திடலாம்

போர்செடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும் 

டெசரோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் செல்லும்

மேலும் தெரிந்து கொள்ள:-http://www.gogreenbov.com/

Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி

Give Us Your Feedback