பாம்புகளுக்கு ராக்கி கட்ட முயன்று பறிபோன உயிர்! வைரல் வீடியோ
பாம்புகளுக்கு ராக்கி கட்ட முயன்று பறிபோன உயிர்!
பாம்புக்கு ராக்கி கட்டும்போது, கொத்தியதில் பாம்பாட்டி உயிரிழந்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நாடுமுழுவதும் நேற்று ரக் ஷா பந்தன் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பீகாரில் பாம்பாட்டி ஒருவர், தன்னுடன் இருக்கும் இரண்டு பாம்புகளுக்கு ராக்கி கயிறு கட்டி தன் பாசத்தை வெளிப்படுத்த நினைத்துள்ளார்.
இதன்படி, பாம்புகளுக்குக் குங்குமம் வைத்து, ராக்கி கட்ட முயன்றுள்ளார் பாம்பாட்டி. அப்போது ஒரு பாம்பு திடீரென பாம்பாட்டியின் காலில் கடித்துள்ளது. பின்னர், அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/TusharSrilive/status/1429644985029124099
बिहार के सारण में बहन से साप को राखी बंधवाना महंगा पड़ गया साप के डसने से भाई की चली गई जान pic.twitter.com/675xsgnZ6N
— Tushar Srivastava (@TusharSrilive) August 23, 2021
Tags: வைரல் வீடியோ