இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் இவைதான்: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 09.08.2021 நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் எனவும்
10ம் தேதி தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோவை, தேனி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடு துறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
ஆகஸ்ட் 11-ந் தேதி நீலகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுவை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12, 13-ந் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்