தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்,
அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்யும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்