Breaking News

சேலம் மாவட்ட கட்டுபாடுகள் 6 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி...முழு விபரம்

அட்மின் மீடியா
0

 சேலம் மாவட்டத்தில் நாளை முதல் அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. வணிக வளாகங்கள், ஜவுளி நகைக்கடைகள், பல்பொருள் அங்காடி, உள்ளிட்டவை தினமும் மாலை 6 வரையே திறக்க அனுமதி.

சேலம் மாநகராட்சி மால்கள், துணிக்கடைகள், நகை கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை மாலை 6 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி 

வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமையில் செயல்பட தடை.

செவ்வாய்பேட்டை மெயின் ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி நோடு, பால் மார்க்கெட், லீபஜார், வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி. 

வ.உ.சி மார்க்கெட், சின்னகடை வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ, பழம், மற்றும் காய்கறி கடைகள் மாலை 6 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி.

மால்கள், துணிக்கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்கள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களிலும் குளிசாதன வசதி பயன்படுத்த தடை 

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முழுவது தடை.

திங்கள் முதல் வெள்ளி வரை ஏற்காட்டிற்கு வரும் பயணிகளுக்கு கோவிட்-19 இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சான்று கட்டாயம். 

கொங்கணாபுரம் மற்றும் வீரகனூர் சந்தைகள் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை செயல்பட தடை. மேட்டூர் அணை பூங்கா ஆகஸ்ட் 23 ஆம் தேதி பொதுமக்கள் செல்ல தடை. 

பொது மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்யவதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback