அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டில்
03.08.2021 மற்றும் 04.08.2021:
நீலகிரி, கோயமுத்தூர், சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
05.08.2021.06.08.2021:
நீலகிரி, கோயமுத்தூர், சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய ஒருசில உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
07.06.2021:
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோயமுத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
Tags: தமிழக செய்திகள்